தஞ்சை தெற்கு மாவட்டம் SDPI-கட்சியின் அரசியல் பயிலரங்கம் பட்டுக்கோட்டை தொகுதி சார்பாக மதுக்கூர் நகரில் நடைபெற்றது.
SDPI-கட்சியின் அரசியல் பயிலரங்கத்திற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அசாருதீன் தலைமை தாங்கினார். மதுக்கூர் நகர செயலாளர் அகமது பிலால் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அரசியல் பயிலரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI-கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் பொதுச்செயலாளர் முகமது புகாரி மற்றும் மாவட்ட செயலாளர் ரியாஸ் அகமது கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை தொகுதி நிர்வாகிகள்,மதுக்கூர் நகர நிர்வாகிகள், அதிரை நகர நிர்வாகிகள், பட்டுக்கோட்டை நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் எஸ்டிபிஐ கட்சியின் துவகத்தில் இருந்து இன்று வரை மக்களுடன் சேர்ந்து முன்னெடுத்த போராட்டங்கள்,உள்ளாட்சி பணிகளில் சாதித்து காட்டியவை குறித்தும் பேசப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் கிளை முதல் செயல்வீரர்கள், உறுப்பினர்கள் என 50 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மதுக்கூர் கிளை இணை செயலாளர் அகமது அலி நன்றியுரை நிகழ்த்தினார்.
Post a Comment