தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் ஜேசிபி இயந்திரம் கொண்டு சீரமைக்கப்பட்டது.
மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புதர்கள் மண்டி காணப்படுவதால் மைதானத்தில் விளையாட முடியாமல் இருப்பதாக மல்லி நியூஸ் வாயிலாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.விளையாட்டு மைதானத்தை சீரமைக்க பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.
செய்தி எதிரொலியாக வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா மைதானத்தை பார்வையிட்டு சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி செயலர் தெட்சிணா மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். ஜேசிபி இயந்திரம் கொண்டு சரி செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று(மே.7) மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு சரிசெய்தனர்.
கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்துவற்கு ஏற்றார் வகையில் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
மைதானம் குறித்து செய்தி வெளியிட்ட லிங்க்
Post a Comment