தஞ்சை தெற்கு மாவட்டம்,அதிராம்பட்டினம் மமக நகர அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் மதுக்கூர் புரோஸ்கான் தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு முக்கியமான தீர்மானங்களும்,ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன இதில் வஃக்ப் ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய்ய கோரியும் ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய கோரியும் என்று இரட்டை கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 6 மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற இருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கெடுப்பது,
மாநாடு சம்மந்தமாக தெருமுனை பிரச்சாரம், சுவர் விளம்பரம், நோட்டீஸ், பிளக்ஸ் பேணர் வைப்பது, ஜமாஅத் சந்திப்பு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும் மாநாட்டுக்கு அதிகமான மக்களை அழைத்து செல்வது என்றும்,மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் நடத்துவது போன்ற பல்வேறு மாநாடு குறித்த செயல்பாடுகள் ஆலோசனை செய்யப்பட்டு பணிகள் முடக்கிவிடப்பட்டது.
Post a Comment