தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினத்தில் கடந்த ஒரு வருட காலமாக மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூபாய் 80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு துறைமுகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.அண்மையில் நவம்பர் மாதம் 15ஆம் தேதி வீசிய கஜா புயலால் கடல் தொழிலும், விவசாயமும் , இன்னும் பிற பல வீடுகளும் கடுமையான சேதத்தை சந்தித்தது .
இதையடுத்து தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணத் தொகை இன்னும் வழங்கப்படாததை கண்டித்து மீனவர் சங்கம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் மாநிலச் செயலாளர் இயக்கத்தின் Ak தாஜூதீன் அவர்களும்,மாவட்ட பொருளாளர் இப்ராகிம், அ.சர்புதீன் மற்றும் நாட்டுப்படகு விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் SRK முகம்மது ரபீக் அவர்களும் கலந்துகொண்டு தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இதனை எதிர்த்து துறைமுகக் கட்டுமானப் பணி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் துறைமுகக் கட்டுமானப் பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment