*"கோட்டையை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி" அனைவரையும் அழைக்கிறார்... மல்லிப்பட்டினம் MTK.பசீர் அகமது அவர்கள் ..!!*





தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக அரசு பதவிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு 100% வேலை வாய்ப்பையும், தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு பதவிகளில் 90% வேலைவாய்ப்பையும், தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும், மண்ணின் மைந்தர்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பை இயற்ற *உறுதிச் சட்டம்* வலியுறுத்தி கோட்டையை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற உள்ளது.

நோக்கம்:
            கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு பதவிகளுக்கு 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கூட தமிழரில்லை. மேலும் ஒரு சதவீதம் கூட தமிழர்கள் இடம்பெறவில்லை. இது தமிழர்களுக்கு  மத்திய அரசு செய்த மாபெரும் துரோகம்.



       இதை கண்டிக்கும் விதமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அதன் நிறுவனர் தி. வேல்முருகன் Ex.MLA அவர்கள் தலைமையில் கோட்டையை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற உள்ளது.

     நாள்: 28/02/2109, வியாழக்கிழமை.
    நேரம்: மாலை 3:00 மணி
    இடம்: ராஜரத்தினம் விளையாட்டு மைதானம், எழும்பூர், சென்னை.

       இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தின் சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் மல்லிப்பட்டினம் MTK பசீர் அகமது அவர்கள்,  தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதை பற்றி மக்களிடையே எடுத்துரைத்து மக்களுக்கு அழைப்பு விடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    அனைவரையும் கோட்டையை நோக்கி அழைக்கிறார் ;

         MTK. பசீர் அகமது,
         மாவட்டச் செயலாளர்,
         தஞ்சை மாவட்டம்,
        தமிழக வாழ்வுரிமை கட்சி.





Post a Comment

Previous Post Next Post