புதுப்பட்டினத்தில் சிறப்பாக நடைபெற்ற SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ..!!

SDPI கட்சியின் சார்பில் இன்று (24/02/2019)மாலை 3 மணி அளவில் தஞ்சை தெற்கு மாவட்டம், புதுப்பட்டினத்தில் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனை








கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தை மாவட்ட பொதுச் செயலாளர் A.அப்துல்லாஹ் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

மாவட்ட செயலாளர் அவுரங்கசீப் அவர்கள் இக்கூட்டத்திற்கு வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் SDPI கட்சியின் தேர்தல் நிலைபாடு மற்றும் தேர்தல் பணிகள் குறித்து செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விவாதிக்கப்பட்டது.

மேலும் இக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் மாநில செயலாளர் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்துகொண்டு செயல் வீரர்கள் இடையே கலந்துரையாடினார்.

மேலும் இக்கூட்டத்தில்   புதுப்பட்டினம் கிளை தலைவர் முகம்மது சுல்தான் அவர்களும் முன்னிலை வகித்தனர்.

இறுதியில் சகோதரர் அப்துல் ரகுமான் மாவட்ட பொருளாளர் அவர்கள், இக்கூட்டத்திற்கு நன்றியுரையாற்றினார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் தலைமையின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிப்படும் என்று கூறினார்கள்.

Post a Comment

Previous Post Next Post