தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை பாடதிட்டதின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்கி
மொழிபாடத்தாள் தேர்வு முடிந்தது .
பிளஸ்டூ தேர்வுகளில் இதுவரை பாடம் ஒன்றுக்கு 200 மதிப்பெண்கள் என 1200 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. அதேபோன்று மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு இந்த ஆண்டு ஒரே தாளாக தேர்வுகள் நடைபெறுகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வு வளாகத்திற்குள் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மார்ச் 19-ஆம் தேதி தேர்வுகள் நிறைவடையும் நிலையில் ஏப்ரல் 19-ல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் , பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 78 மாணவ மாணவிகள் இராஜாமடத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர்.இதில் மாணவர்கள் 50 பேரும் மாணவிகள் 28 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
இதுதவிர மல்லிப்பட்டினத்தில் இருந்து இதழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளும் அவர்களுக்கான தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர்.
அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ் தேர்வு நடைபெற்றது.
மல்லிப்பட்டினத்தில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடம் கேட்டபொழுது தமிழ் தாள் சுலபமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Post a Comment