தேமுதிக vs அமமுக அரசியல் தர்பார். . . . !!!!

இனி தேமுதிக.,வுடன் பேசவே கூடாது..! கடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி...!!

தனது கூட்டணிக்கு தேமுதிக., வரும் என்று அதிமுக நம்பிக்கையில் அதிமுக., காத்திருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் அதிமுக.,  - திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேமுதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதிமுகவுக்கு ஆட்டம் காட்டி வரும் தேமுதிகவுக்கு மக்களவையில் குறைந்த சீட் கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை 4 சீட் வரை கிடைத்தால் போதும் என பேசிவந்த தேமுதிகவிற்கு 2 அல்லது 3 சீட் மட்டுமே

கொடுக்க முடியும் என அதிமுக மேலிடம் முடிவு செய்து அதை தேமுதிக தலைமைக்கும் தெரிவித்துவிட்டது. அதேநேரத்தில் ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் தேமுதிக பேசி நம்பகத்தன்மையை இழந்து விட்டது.

இதனால் கடும் கோபமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இனி தேமுதிகவுடன் பேச வேண்டாம். அதோடு தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய, அமைச்சர் தங்கமணி, வேலுமணியிடமும் பேட வேண்டாம் என முதல்வர் தடை விதித்துள்ளார்.

ஆகையால் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள தேமுதிக நாளை மீண்டும் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். அதில் டிடிவி தினகரனுடன் சேர்ந்த போட்டியிடலாமா என்று விஜயகாந்த் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

Post a Comment

Previous Post Next Post