பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் சார்பாக அழைப்பிதழ்!!!

கடந்த வருடம் நவம்பர் 16-ந் தேதியன்று 110 கி.மீ. வேகத்தில் கஜா புயல் வீசி தமிழக டெல்டா பகுதியை பதம் பார்த்தது . இதில்  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, கடலூர், கரூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றினாலும், கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதனைத்தொடர்ந்து தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் 125 வீடுகள் புணரமைப்புக்கு தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இதில் வீடுகள் புனரமைப்பு பனி முடிவடைந்தது வீட்டு உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி
08.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அதிரை ECR சாலையில் அமைந்திருக்கும் பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்டின் மாநில ,மாவட்ட  தலைவர்கள் ,நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் .

எனவே இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தந்து இந்நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு பாப்புலர் ப்ரண்ட்
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்ளபடுகிறது

Post a Comment

Previous Post Next Post