வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அம முக உடன் sdpi கட்சி கூட்டணி வைத்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் sdpi கட்சியின் தேர்தல் சம்பந்தமான சிறப்பு ஆலோசனைக் கூட்டங்களை மாவட்ட அளவில் நடத்தி வருகிறது. அது போல தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை ,சேதுபாவாசத்திரம் ,மல்லிப்பட்டினம் ,புதுப்பட்டினம் , செந்தலை பட்டினம் போன்ற ஊர்களில் உள்ள அனைத்து sdpi கட்சியின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்திற்கு மல்லிப்பட்டினம் நகரத் தலைவர் பஹத் தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அவுரங்கசீப் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து செயல் வீரர்களுக்கு இடையே ஆலோசித்தார்.இறுதியில் புதுப்பட்டினம் கிளைத் தலைவர் எம் எஸ் டி முகம்மது சுல்தான் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இதில் மாவட்டத்தின் அமமுக முருகேசன் அவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.
மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற SDPI கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்
Mallinews
0

Post a Comment