மல்லியில் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சியினர் ..!!

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தஞ்சையில் திமுக, அமமுக,அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளிலிருந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இது தவிற சுயேச்சைகளும் களம் காண்கின்றனர். வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமி அவர்களை ஆதரித்து, (6/04/2109) இரவு மல்லிப்பட்டினம் கடைத்தெருவில்,அக்கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்பொழுது பேசியவர்கள் மத்திய அரசையும், மாநில அரசுகளையும் கடுமையாக விமர்சித்தனர்.தமிழகத்தில் புதியதோர் மாற்றம் காண நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் என மக்களை கேட்டுக் கொண்டனர்.


Post a Comment

Previous Post Next Post