மல்லிப்பட்டினத்தில் s.s பழனிமாணிக்கம் தேர்தல் பிரச்சாரம் . . .!!!

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.


ஒன்பதாவது முறையாக தஞ்சை தொகுதியில் இவர் போட்டியிடுகிறார். இதில், 1996, 98, 99, 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல்களில் இவர் வெற்றி பெற்றார். 1984, 89, 1991 தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் பழனிமாணிக்கம். மாவட்டச் செயலாளராக இருந்ததால் தொகுதி முழுவதும் நன்கு அறியப்பட்டவர்.

இதனை அடுத்து தேர்தல் பிரச்சாரத்தை அடுத்து இன்று 04-04-2019 வியாழக்கிழமை தஞ்சை தெற்கு வட்டார பகுதிகளில்  தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினர். இதனை அடுத்து இன்று மாலை சரியாக 6.30 மணியளவில் மல்லிப்பட்டினம்  பேருந்து நிலையத்தை வந்தடைந்தார். இவருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை சேர்ந்த பலரும் உற்சாக வரவேற்பு அளித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் தஞ்சாவூர் நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் அவர்கள் மல்லி  மக்களிடையே சிறப்புரையாற்றினார். இதில்
மனோரா சீரமைப்பு ,பேருந்து நிலையத்தில் மின் உயர கோபுர விளக்கு அமைத்து தரப்படும் என உறுதியளித்தார் . மல்லிப்பட்டினத்தை  சேர்ந்த ஏரளமான பொதுமக்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.

இருப்பினும் 2019 நாடாளுமன்ற தேர்தல் வருகையையோட்டி பிரச்சாரம் துவங்கியுள்ள நிலையில் மல்லியில்  எஸ் எஸ் பழனிமாணிக்கம் அவர்களின் முதல் வேட்பாளரின் வருகை என்பதால் அதிகமான மக்கள் கூட்டம் திரண்டது




Post a Comment

Previous Post Next Post