தமிழக முஸ்லிம்கள் காஷ்மீரை போன்று நெருக்கடிகளை சந்திக்கும் சூழல் உருவாகும் .! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமிர் பேச்சு ..!!

6% சிறுபான்மை ஓட்ட வச்சு நாக்கு வலிக்கவா- தமிழக முஸ்லிம்கள் காஷ்மீரை போன்று நெருக்கடிகளை சந்திக்கும் சூழல் உருவாகும்... -
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமிர் பேச்சு!

இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நாங்குநேரியில் கணிசமாக இருக்கும் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., போன்றவர்கள், அதிமுகவின் தமிழ் மகன் உசேன், மகபூப் ஜான் உள்ளிட்டவர்கள் மூலமாக ஜமாத்துகளை சந்தித்து, அவர்களிடமிருந்து கோரிக்கைகளை பெற்று வரும் நிலையில், அதற்கு வேட்டுவைக்கும் விதமாக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

தனது கட்சிக்காரர்களால் அழைத்து வரப்பட்ட  முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகளிடம், “உங்களுக்கு நாங்க எதுக்கு செய்யனும். நீங்கதான் எங்களுக்கு ஓட்டு போட மாட்டீங்களே.. நீங்களும் ஓட்டு போட மாட்டீங்க.. கிறிஸ்டியனும் ஓட்டுபோட மாட்டான். 6 சதவீத ஓட்ட வச்சு நாக்கு வலிக்கவா... இப்படி செஞ்சிக்கிட்டே இருந்தீங்கன்னா காஷ்மீர்ல பன்னுன மாதிரி ஒதுக்கி வக்கிற நிலைமை வந்துரும்.” என்று கூறி மனுவை வாங்க மறுத்து அவமதித்ததோடு, காஷ்மீரை போன்று நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

இது அப்பட்டமான மிரட்டலாகும். அவர் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.


Post a Comment

Previous Post Next Post