மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆரில் அதிகரிக்கும் மாடுகள் தொல்லை .! கடுமையாக எச்சரித்த காவல்துறை ..!!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் மாடுகள் தொல்லை அதிகரித்து வருகின்றது. இதனால் பல்வேறு விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. அதனை நாம் மல்லி நியூஸின் வாயிலாக அறிந்துள்ளோம். பல விழிப்புணர்வு செய்திகளையும் பரப்பில் உள்ளோம்.

இன்று (18/10/2019) மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் வந்து கொண்டிருந்த சேதுபாவாசத்திரம் காவல்துறை அதிகாரி கடுமையாக எச்சரித்தார். பொதுமக்கள் தங்கள் மாடுகளை வீட்டில் வைத்து பராமரித்து கொள்ளுங்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஈ.சி.ஆர் சாலையில் மாடுகள் திரிந்து கொண்டிருந்தால் அனைத்து நாடுகளையும் ஏற்றி விலங்குகள் பாதுகாப்பதில் ஒப்படைக்கப்படும் என கடுமையாக எச்சரித்தார்.



Post a Comment

Previous Post Next Post