நாளை மறுநாள் விடுமுறை . மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு . !
தஞ்சை பெரியக்கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா வரும் நவம்பர் 6ம் தேதி நடைபெறவுள்ளது . தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . உலகத்தில் கட்டட மற்றும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜ சோழன் . அவரின் பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் சதய விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது .
அந்த வகையில் , ராஜராஜ சோழனின் 1034 ஆண்டு சதய விழா , நாளை ( செவ்வாய்க்கிழமை ) தொடங்கி புதன்கிழமை வரை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது .
இந்த இரு தினங்களில் ராஜராஜ சோழன் புகழை போற்றும் வகையில் பட்டிமன்றம் , கவியரங்கம் , கருத்தரங்கம் , இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . வரும் 6 ஆம் தேதி அதாவது புதன்கிழமை ராஜராஜ சோழன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் , தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாலை அணிவிக்க உள்ளார் . இதனால் வரும் நவம்பர் 6 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment