பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மற்றும் தஞ்சை தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு.!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  திருவாரூர் மற்றும் தஞ்சை தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்டங்களின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் இன்று (05.12.2019) மதுக்கூரில் உள்ள தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு  உறுப்பினர்  ஜெ முஹம்மது ரசின் அவர்கள் கலந்துகொண்டார். இதில் திருவாரூர் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்டங்களின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் அடுத்த மூன்றாண்டுகளுக்கான திருவாரூர் மற்றும் தஞ்சை தெற்கு ஒருங்கிணைந்த மாவட்டத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான  மாவட்ட தலைவராக அதிராம்பட்டினத்தை சேர்ந்த
A ஹாஜா அலாவுதீன் MSc
அவர்களும்,  மாவட்ட செயலாளராக  முத்துப்பேட்டையை சேர்ந்த
EKN மர்சூக் அகமது B.E அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இறுதியாக புதிய மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நிறைவுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

Post a Comment

Previous Post Next Post