மதுக்கூரில் சிறப்பாக நடைபெற்ற கிரசென்ட் பிளட் டோனர்ஸின் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி .!

பத்திரிக்கை அறிக்கை


கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் எனும் தன்னார்வ அமைப்பு அவசர கால இரத்த தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

தமிழகம் தழுவிய அளவில் இயங்கும் இத்தொண்டு நிருவனத்தின் மதுக்கூர் கிளை சார்பில் சமூக விழிப்புணர்வு மற்றும் இரத்த கொடையாளர்களை கொளரவிக்கும் நிகழ்வு 15-12-2019 அன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கிளைத்தலைவர் ஜெ இஜாஸ் அஹமது தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் மற்றும் பட்டுக்கோட்டை சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேச மூர்த்தி மற்றும் அதிராம்பட்டினம் சுற்று சூழல் மன்றம் 90.4ன் தலைவர் வி. விவேகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

 முன்னதாக  CBD யின் தஞ்சை மாவட்ட தலைவர் முனைவர் செய்யது அஹமது கபீர் உரையாற்றுகையில், மாணவ செல்வங்கள் வழி மாறி செல்லும் வேளையில் இது போன்ற உயிர்காக்கும் பணிகள் செய்திடும் இளைஞர்களை ஊக்க படுத்தவேண்டும் என்றார் மேலும் இவ்வமைப்பின் மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் இரத்தம் தானமாக வழங்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டிய அவர் அவசர கால தேவை எதுவாகிலும் உதவிட இன்னும் மாணவ சமூகங்கள் ஒன்றிணைந்து செயலாற்றிட வேண்டும் என கேட்டுகொண்டார்.

பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஜாமிஆ மஸ்ஜித் தலைவர் முஹைதீன் மரைக்காயர், காவல் ஆய்வாளர் செந்தில் குமார் சித்த மருத்துவர் கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வேல்ஸ் ரோட்டரி ரெட்கிராஸ் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் கலந்துகொண்ட மனிதநேயமிக்க நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
அதிக ரத்த தானம் செய்த இரத்தக் கொடையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் கஜா புயலில் சிறப்பாக பணி செய்த அரசு மருத்துவமனை மின்சாரவாரியம் பேரூராட்சி ஆகியவற்றிற்கு சமூக சேவைக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை மதுக்கூர் நகர சிபிடி நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்திருந்தனர்.


Post a Comment

Previous Post Next Post