தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மல்லிப்பட்டினம் சீதக்காதி தெருவின் வழியாக சென்ற உயரழுத்த மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது.
அப்போது பொதுமக்கள் யாரும் மின்கம்பம் அருகே இல்லாததால், பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
ஆனால், அறுந்து விழுந்த மின்கம்பி தீப்பிடித்தது இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்ததால், பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.
ஏற்கனவே ஊரில் உள்ள கட்சி,இயக்கம் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் சார்பாக மல்லிபட்டினத்தில் அமைந்திருக்கும் மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் ஆபத்தான முறையில் பாழடைந்த துருப்பிடித்த நிலையில் உள்ளது.உடனே மாற்றி புதிய மின்கம்பங்கள்,மின்கம்பிகள் அமைத்து தர கோரிக்கை வைத்தது குறிபிட தக்கது.
Post a Comment