மல்லி நியூஸ் சார்பாக ஊராட்சி நிர்வாகத்திற்க்கு அன்பான வேண்டுகோள்...!!



சரபேந்திர ராஜபட்டினம் ஊராட்சி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடைபெற்றுள்ளது. .

சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி உறுப்பினர்களின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

 தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியுடன்  எந்தவொரு நிகழ்வுகள்  நடத்துபடி அரசு அறிவித்திருக்கிறது.

ஆனால் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டதில் சுமார் 20 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.சமூக இடைவெளி பின்பற்றாமல் சிறிய அறையினுள் நடைபெற்றுள்ளது.தற்போது கொரான தொற்று பரவல் வீரியமடைந்து வரும் நிலையில் இதுபோன்ற அரசு அலுவலர்கள் சார்ந்தவர்கள் செயல்படுவது நியாயமா...?

ஊராட்சி செயலாளர் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கவும்,இதற்கு மாற்றுவழி ஏற்படுத்துமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post