அதிமுக முன்னாள் எம்.பி. பரசுராமன், முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசும் வீடியோ அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக முன்னாள் எம்.பி, பரசுராமன் வெளியிட்டுள்ள வீடியோவில், “அறிஞர் அண்ணா வழிகாட்டுதல் படி, அவரின் கொள்கைகளை பின்பற்றி மிக சிறப்பாக ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்த நான் கடமைப்பட்டுள்ளேன். தமிழக மக்கள் யாரை நம்பி ஆட்சியை கொடுத்தார்களோ, அவர் சிறப்பான ஆட்சியைத் தருகிறார். ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்வதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் முன்னாள் எம்.பியான பரசுராமன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஆனால் சமீபகாலமாக இருவருக்குமான நெருக்கம் குறைந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பரசுராமன் வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பரசுராமன் திமுகவுக்கு செல்ல நாள் பார்த்து வருகிறாரோ என்ற பேச்சு அதிமுகவுக்குள் எழுந்துள்ளது.
Post a Comment