ஆவணத்தில் ததஜ சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி.!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக நான்காவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி ஆவணம் கிளையில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்  ராஜிக் முகமது தலைமை வகித்தார்,மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், மாவட்ட துணை செயலாளர் பாவா,துணை செயலாளர் வல்லம் ஜாபர்,தொண்டரணி செயலாளர் அப்துல் ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் சிறப்புரை ஆற்றினார்.

 இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பேராவூரணி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார்,  பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் செங்கமல கண்ணன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரராஜன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் , சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை ஆவணம் கிளை நிர்வாகிகள் ரியாஸ்,யூசுப்,அப்துல்லா மற்றும் தொண்டர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்ததை வெகுவாக பாராட்டினார்.

Post a Comment

Previous Post Next Post