தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தை அடுத்த புதுப்பட்டிணம் கடற்ரையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாவாசிகள்.
மனிதனின் எல்லாவித அழுத்ததிற்கும் மாமருந்து இயற்க்கை.அப்படி ரம்மியமான எழிலுடன் காணப்படுகிறது புதுப்பட்டிணம் கடற்கரை.இங்கு கடந்த சில மாதங்களாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.குறிப்பாக விடுமுறை நாட்களின் மாலை நேரங்களில் அதிகமாகவே வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது தெரிவிக்கையில் சில அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தி தருவதன் மூலம் இப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.சாலை வசதி,மின் விளக்குகள்,சுகாதர வசதிகள் போன்றவற்றை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Post a Comment