அடுத்த தலைமுறையினரை கால்பந்து போட்டிக்கு தயாராக்கும் மல்லிப்பட்டிணம் முன்னாள் வீரர்கள்.!

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் காரணமாக இப்போதுள்ள சிறுவர்கள் உடல் ஆரோக்கியத்தை தரும் விளையாட்டுகளை மறந்து மொபைல் கேம்களிலே மூழ்கி கிடக்க கூடிய அவல நிலை இருந்து வருகிறது.இதனை தவிர்த்து விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் சிலரின் முயற்சியால் சிறுவர்களுக்கு கால்பந்து விளையாட்டுக்கான பயிற்சி,அவர்களுக்கு தேவையான உபகரணங்கள்,விளையாட்டு சீருடை ஆகியவற்றை இலவசமாக வழங்கி விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கின்றனர்.

இதனால் தவறான பாதைகளுக்கும்,ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகும் போக்கும் குறைந்திடும் என்று ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.மேலும் மாநில அளவில் நடக்க கூடிய போட்டிகளுக்கு இவர்களை தயார்படுத்தும் வண்ணம் சிறப்பு பயிற்சியாளர்கள் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.விளையாட்டு மைதானத்தை ஒழுங்குப்படுத்திடவும், விளையாட்டு உபகரணங்கள்,போட்டிகளில் பங்கேற்க அரசின் உதவி தேவைப்படுகிறது என்பன அவர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

 விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Post a Comment

Previous Post Next Post