மல்லிப்பட்டினம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.!

 



தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அருகே புதுப்பட்டிணத்தில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.


துவரங்குறிச்சியிலிருந்து மல்லிப்பட்டினம் நோக்கி வந்த வாகனமும் மல்லிப்பட்டினத்தில்  இருந்து அதிரை நோக்கி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இதில் வாகனத்தில் பயணம் செய்த இருவருக்கும் கை,கால்களில் பலத்த அடி. அருகில் உள்ளவர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு  எஸ்டிபிஐ கட்சி ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு விரைந்த ஆம்புலன்ஸ்  மூலம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.





Post a Comment

Previous Post Next Post