தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பணத்திற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை முழு கரும்புடன் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த ரொக்கப் பரிசுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு ஜனவரி 2ம் தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலினும், மாவட்டங்களில் அந்தந்த பகுதி அமைச்சர்களும் தொடங்கி வைக்க உள்ளனர்.

Post a Comment