பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படுவதற்காக தஞ்சை தாலுகா தாலுகா அலுவலகத்திற்கு வேட்டி சேலைகள் லாரிகளில் வந்து இறங்கின.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1, 153 ரேஷன் கடைகள் மூலம் 6 லட்சத்து 93 ஆயிரத்து 481 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் தஞ்சை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் என ஒன்பது தாலுகாக்கள் உள்ளன. இந்த 9 தாலுகாக்களுக்கும் வேட்டி சேலைகள் லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது. இதன்படி தஞ்சை தாலுகா அலுவலகத்திற்கு வந்த வேட்டி சேலைகள் தனி அறையில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் இந்த வேட்டி சேலைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Post a Comment