உழவன் செயலியை விவசாயிகள் பதிவிறக்க பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி அறிவுறுத்தல்.!

 


உழவன் செயலி மூலம் விவசாயம் தொடர்பான அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - விவசாயிகளின் நலன் கருதி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வகுக்கப்பட்டுள்ள உழவன் செயலி மூலம்
விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்து திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் உள்ள உரம், விதை இருப்பு மற்றும் இதர இடுபொருட்களின் இருப்பு விவரங்கள், வேளாண்மை இயந்திரங்களின் மானிய விவரங்கள் போன்றவற்றை உழவன் செயலி மூலம் தெரிந்து கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். உழவன் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் விவசாயிகள் தங்கள் செல்போனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை உழவன் செயலியில் பதிவு செய்தால் மட்டுமே இடுபொருட்கள்
வழங்கப்படும். எனவே விவசாயிகள் தேவையான இடுபொருட்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

உழவன் செயலி இல்லாத கைபேசி கொண்டவர்கள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இந்த செயலியை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம் என்றார்.

Post a Comment

Previous Post Next Post