பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம்.!

 


இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை சார்பில். பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயம்  திருச்சபையிலும்  கத்தோலிக்க திருச்சபையிலும் மாவட்ட தலைவர் நாகூர் கனி அவர்கள் தலைமையில் மத நல்லிணக்கத்தைப் பேணி காப்போம் என்ற அடிப்படையிலும்  இந்திய ஒற்றுமை பயணம் நூறாவது நாளை கடந்து விட்டதையும் கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் தின பெருவிழா கொண்டாடப்பட்டது.

மாவட்டத் துணைத் தலைவர் ராமசாமி,சக்திவேல் வட்டாரத் தலைவர் அன்பழகன்.செந்தில் சிறுபான்மை துறை மாவட்டத் துணைத் தலைவர் அந்தோணி, ஜான் பிரிட்டோ,சிறுபான்மை துறை வட்டாரத் தலைவர் அஜீஸ்,மதுக்கூர் ஜான் மூத்த காங்கிரஸ் நிர்வாகி வைரக்கண்ணு இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் ரகுநாத்,சிறுபான்மை துறை,அதிராம்பட்டினம் நகரத் தலைவர். முகமது மாலிக்,மல்லிப்பட்டினம் நகரத் தலைவர் முகமது அப்துல் காதர்,ராஜிக் முகமது,சையது இப்ராஹிம்,கிருஷ்ணமூர்த்திநெப்போலியன்,அக்கரைச்செல்வன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் தலைவர்களும் கலந்துகொண்டு ஒற்றுமையை நிலை நாட்டினார்கள்.



Post a Comment

Previous Post Next Post