தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சி,மல்லிப்பட்டினம் கடைவீதியில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய கவுன்சிலர் மதிவாணன்,முன்னாள் அதிமுக கவுன்சிலர் கள்ளம்பட்டி செல்வம் ஆகியோர் இணைந்து கொடியேற்றினர்.
மல்லிப்பட்டினம் கடைவீதியில் உள்ள அதிமுக கொடி கம்பத்தில் கொடியேற்றி மிக விமர்சியாக கொண்டாடினர்.மேலும் கட்சி கொடியேற்றி வைத்து இங்குள்ள அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் உரையாற்றினார்கள்.இந்நிகழ்விவில் அதிமுக கிளை அவைத்தலைவர் அல்லாப்பிச்சை,ஒன்றிய கவுன்சிலர் மீனவராஜன்,கிளை செயலாளர் அப்துல் ஹப்பார்,தாஜூதீன்,ஜாகீர் உசேன்,ஹாஜா அலாவுதீன்,அவுலியா முகமது,முகமது தமீம்,மக்கான் முகமது,அப்துல் கையு,புரோஸ்கான்,ஜகுபர் சாதிக்,அவுலியா முகமது மற்றும் அதிமுக கிளை உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு வெகு விமரிசையாக கொண்டாடினர்.



Post a Comment