TNTJ மல்லிப்பட்டினம் கிளை சார்பாக நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கூட்டம்...!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் கிளையின் சார்பாக இன்று (22.01.2023) மாலை 6.30 மணியளவில் சமூக விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட தலைவர் ராஜிக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மெளலவி தாஹா MISC அவர்கள் பித் அத் ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பிலும் , ஆவணம் ரியாஸ் அவர்கள் சமுதாய பாதுகாப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

இதன் பின்னர் சில தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

1. மல்லிப்பட்டினத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டுகள் சர்வ சாதரணமாக புழக்கத்தில் உள்ளதை சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. மல்லிப்பட்டினம் ECR சாலையில் மாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன, இதனால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. புதுக்குளம் அருகில் குப்பைகள் கொட்டி எரிக்க படுகின்றன , அதனை சரிசெய்ய வேண்டும்.

என தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.






 


Post a Comment

Previous Post Next Post