தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தும் விசைப்படகுகளால் கடல் வளம் பாதிக்கப்படும் என்று கூறி, உரிய நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறையை கண்டித்தும், அதிராம்பட்டினத்தில் ஏஐடியூசி மீனவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சின்னத்தம்பி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தேசிய மீனவர் பேரவை தலைவர் டாக்டர் குமாரவேலு, ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையாளர் சிறப்புரையாற்றினார். இதில் திரளான நாட்டுப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாக் ஜலசந்தி பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். 1983 கடல் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். விசைப்படகுகள் சென்று வர ஒரு வழி பாதையை நடைமுறை படுத்த வேண்டும். விசைப்படகுகள் இரவில் மடிவலையைப் பயன்படுத்தி கரை ஓரத்தில் மீன்பிடிக்கும் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் விசைப்படகு மீனவர்களால் சேதம் அடையும் நாட்டுப் படகை மீனவர்களின் வகைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Post a Comment