மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் பாரம்பரிய மீனவர் நலச்சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா.!

 


தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள  கட்டிடத்தில் பாரம்பரிய மீனவர் நல சங்க அலுவலகம் திறக்கப்பட்டது.

இன்று(ஜன.4) காலை 10 மணி அளவில் மல்லிப்பட்டினம் வடக்கு துறைமுக வளாகம் அருகே உள்ள மீன்வளத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் பாரம்பரிய விசைப்படகு மீனவர் நல சங்கம் மற்றும் பாரம்பரிய கண்ணாடிநார் நாட்டுப்படகு மீனவர் நல சங்கம் இணைந்து புதிய சங்க நிர்வாக அலுவலகம் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமையில் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விசைப்படகு,நாட்டுபடகு சங்க நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள், சமுதாய நலமன்ற நிர்வாகிகள்,ஊராட்சி மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் மீனவர்கள் கலந்துக்கொண்டனர்.







Post a Comment

Previous Post Next Post