ஆங்கிலேய மன்னன் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட நினைவுச் சின்னமான மனோரா தற்பொழுது தமிழ்நாட்டின் ஒரு மிக முக்கியமான சுற்றுலா தளமாக மாறி கொண்டு வருகிறது. இதற்கான பராமரிப்பு வசதிகள் தமிழக அரசின் சார்பாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் செய்து தரப்பட்டுள்ளது.
இதனை சரியான முறையில் பராமரிப்பு செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சரபேந்திரராஜபட்டினம் ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிற சூழலில் அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் மனோரா சுற்றுலா தளத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மனோராவின் நிலையை ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டறிந்தார்.
Post a Comment