கர்நாடகவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்து மல்லிப்பட்டினம் காங்கிரஸ் சார்பில் பட்டாசுகள் வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கர்நாடக தேர்தல் முடிவில் அதிக பெரும்பான்மையுடன் 136 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றதை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் A. நாகூர் கனி தலைமையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் சிறுபான்மை துறை சேதுபா சத்திரம் வடக்கு வட்டாரத் தலைவர் அஜிஸ்,சிறுபான்மை துறை மல்லிப்பட்டினம் நகர தலைவர் முகமது அப்துல் காதர்,சிறுபான்மை துறை நகரத் துணைத் தலைவர் அயூப் கான்,அதிராம்பட்டினம் சிறுபான்மை துறை நகரத் தலைவர் முகமது மாலிக்,ராஜிக் அகமது,பீர்முகமது,சிராஜுதீன்ஹசன் பாவா,அப்துல் காசிம் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment