தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மீனவர்களின் நலன் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய பொறுப்பு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்வதற்காகவும் அமைக்கப்பட்டதாகும். இது 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். அன்றிலிருந்து இது எப்படி ஒரு தொழிலாளர்களுக்கு ஒரு நலவாரியமோ அதே போல் வக்புரியத்திற்கு ஒரு வாரியமோ அதுபோல் மீனவர்களுக்கான இந்த வாரியம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. மீன்பிடி தொழில் செய்யக்கூடிய மீனவர்களுக்கு மீனவர் நலவாரிய அட்டை வழங்கப்பட்டு மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த வாரியத்தின் புதிய துணை தலைவராக மல்லிப்பட்டினத்தை சார்ந்த AKT என்று அழைக்கக்கூடிய A. தாஜுதீன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தேர்வு செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கு சிறுபான்மை மக்கள் சார்பாகவும் மல்லிபட்டிணத்தை சார்ந்த பொதுமக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் துணைத் தலைவராக(தலைவர் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்) மல்லிப்பட்டினம் A.. தாஜுதீன் நியமனம்...
தஞ்சை தமிழன் மனோஜ்
0
Post a Comment