24 மணிநேரத்தில் குர்ஆனை ஒருவர் வாசிக்க மற்றொருவர் எழுதி உலக சாதனை நிகழ்த்திய மாணவிக்கு பேராவூரணி வட்டார உலமா சபையினர் பாராட்டும் பரிசும் வழங்கல்.!







தஞ்சை மாவட்டம்,பேராவூரணி செம்பியன் மகாதேவிபட்டினம்  (வடக்கூர்) அப்துல் ரவூஃப் மகள் அமீரா  இருபத்தி நான்கு மணி நேரத்தில் குர்ஆன் ஷரீஃபை ஒருவர் வாசிக்க மற்றொருவர் எழுத 18 நபர்களில் தானும் பங்கெடுத்து உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.

அந்த மாணவியை  பாராட்டி  கௌரவிக்கும் வண்ணமாக பேராவூரணி வட்டாரத்தின் உலமா சபை தலைவர் பகாவுதீன் உலவி ஹழ்ரத் தலைமையில் சந்தித்தனர்.

 முன்னாள் தலைவர்  முஸ்தபா அன்வாரி ஹழ்ரத் வாழ்த்துரை வழங்கினார். மரக்காவலசை இமாம் y.ஷிஹாபுத்தீன் ரஹ்மானி  அவர்களின் வாழ்த்துமடலும் பணமுடிப்பும் வழங்கினார். பாசமிகு வடக்கூர் இமாம் ஹாமித் இப்ராஹிம் நூரி ஹழ்ரத் துஆவுடன் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.


Post a Comment

Previous Post Next Post