மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியை நேரடியாக பார்வையிட்ட ஒன்றிய பெருந்தலைவர்,நன்றி தெரிவித்த பொதுமக்கள்(படங்கள்)..!










தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்,சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி காயிதே மில்லத் நகர் பகுதிகளை கொட்டும் மழையிலும் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம்  நேரடியாக ஆய்வு செய்தார்.

காயிதே மில்லத் நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைக்கும்,பழைய சாலைக்கும் உயரம் வித்தியசம் இருப்பதால் அப்பகுதியில் மழை நீர் தேங்கி இருந்தது, இதனால் அப்பகுதியில் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.இதுகுறித்து செய்திகள் வெளியாகின,செய்திகளை  பார்த்த ஒன்றிய பெருந்தலைவர் உத்தரவின் பேரில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மழை நீர் வெளியாகுவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்தனர்.

இந்நிலையில் இந்த பகுதியில் அமைக்கப்பட்ட  சாலையை பார்வையிட்டு அதே அளவில் பழைய சாலை உள்ள பகுதியில் சாலை அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.மேலும் துரித நடவடிக்கைகள் மேற்க்கொண்ட சேர்மனுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.


Post a Comment

Previous Post Next Post