தஞ்சையில் இருந்து அடுத்த மாதம் விமான சேவை.!

 


தஞ்சையில் இருந்து வரும் நவம்பர் மாதம் விமான சேவை தொடங்கப்பட உள்ளது முதல் கட்டமாக சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு விமானத்தை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே, புதுக்கோட்டை செல்லும் சாலையில் விமானப்படை நிலையம் உள்ளது. 2006 ஆம் ஆண்டில் இந்திய வான்படையால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த விமானப்படை நிலையம் ஒரு விமான நிலையமாக செயல்பட்டு வந்தது. அதாவது 1990 ஆம் ஆண்டுகளில் தஞ்சையிலிருந்து சென்னைக்கு வாய்தூத் விமான சேவை இயக்கப்பட்டது. பின்னர் போதுமான வரவேற்பு இல்லாததால் இந்த சேவை நிறுத்தப்பட்டது.

 2012ஆம் ஆண்டு முதல் இது முதன்மையான வான்படை நிலையமாக விளங்கி வருகிறது. இந்த விமானப் படைத்தளம் முற்றிலும் போர் விமானங்களை கொண்டதாகும். இந்நிலையில் வளர்ந்து வரும் நகரமாக விளங்கி வரும் இங்கிருந்து வெளியூருக்கு பலரும் சென்று வருகின்றனர். எனவே இங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 


இந்நிலையில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் நாட்டில் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் தஞ்சை உள்ளிட்ட கைவிடப்பட்ட பெரிய விமான நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்களை சென்னை பெங்களூருக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post