கொரோனா பெருந்தொற்று பொதுமுடக்கத்தால், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இழப்புகளை சரி செய்ய தமிழ்நாடு அரசு ' இல்லம் தேடி கல்வி' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மாணவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவை தொடங்கப்பட்டது. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 2 இலட்சம் தன்னார்வலர்கள் 34 இலட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகின்றனர். அந்த வகையில் சேதுபாவாசத்திரத்தில் உள்ள சொக்கநாதபுரத்தில் தன்னார்வலர் பிரியா என்பவரால் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு அங்குள்ள மாணவர்களுக்கு மாலை நேரங்களில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஊரில் இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் முடிவு அடைந்து, மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைப்பதை ஒட்டி அதை ஒரு விழாவாக முன்னெடுத்து மாணவர்களை அழைத்து மாணவர்களின் திறமையை வெளிக்காட்டும் விதமாக நடன போட்டி, நாடக போட்டி, பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இறுதியாக இல்லம் தேடித்திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு .க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்த தன்னாவலர் பிரியா -இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் எதிரொலி...
தஞ்சை தமிழன் மனோஜ்
0
Post a Comment