அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு நிர்வாகம் உத்தரவு.!

 



அதிராம்பட்டினம் பகுதியில் தொடர் வாகன விபத்துகளின் காரணமாக உயிரழப்புகள் நடைபெற்றுவருவதால் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டது,அதன் விவரம் பின்வருமாறு,

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடரும் வாகன விபத்துக்கள் நடைபெற்று வருவதால் காவல்துறை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் கல்லூரி மற்றும் காவல்துறையால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது.கீழ்க்கண்ட உத்தரவுகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1.அனைவரும் வாகன உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்

2.தலைக்கவசம் இல்லாமல் வாகனத்தில் பயணிக்க கூடாது 

3.இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணிக்க கூடாது

எனவே மாணவர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் தலைக்கவசத்துடன் கல்லூரிக்கு வரவும்,

மீறினால் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.


Post a Comment

Previous Post Next Post