தஞ்சை மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கு.!

 



தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் 23ம் தேதி நடக்க இருந்தது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களுக் காக வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு அன்று காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. இந்த கூட்டத் தில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வர். ஆகவே தஞ்சை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக கூட்டத்தில் வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post