தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான தளபதி மு.க ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்து
திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொகுதி பங்கீட்டு குழுவ்வினர் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில செயலாளர்கள் ஹெச்.அப்துல் பாசித், ஏ.எம்.ஷாஜஹான் ஆகியோர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
பேச்சுவார்த்தை இறுதியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து இராமநாதபுரம் தொகுதி என முடிவானதையொட்டி தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான தளபதி மு.க ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Post a Comment