டெல்லியில் போராடும் விவசாயிகளை சுட்டுக் கொலலாதே,குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வா, வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெறு,எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்று,வேளாண் கடன் முழுமையும் நிபந்தனையற்ற தள்ளுபடி செய்திடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரப்பன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கமால் பாட்ஷா முன்னிலை வகித்தார்.மேலும் போராட்டத்தில் ஒன்றிய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

Post a Comment