தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் கைஃபா இணைந்து மீட்டெடுத்த குளம்,மரம் நடுதல் மற்றும் கடற்கரைகளில் சுற்றுலா தளமாக மாற்றிட நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நாளை(மார்.10) அதிராம்பட்டினம் வருகை தர இருக்கிறார்.
பேராவூரணி கடைமடை விவசாய அமைப்பான கைஃபா மற்றும் தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்றம் இளைஞர்களால் அதிரையில் பல்வேறு சூழலியல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக நீர் மேலாண்மை,மரங்கள் நடுதல்,குளங்களை தூர்வாருதல்,கடற்கரைக்கு பாதைகள் அகலப்படுத்தி புதிய சுற்றுலா தளமாக அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment