பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் சிறப்புரையாற்றினார்.
தொகுதி பார்வையாளர் நாகை. மனோகரன், மாவட்ட அவைத்தலைவர் சுப. சேகர், பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், மாவட்ட துணைச் செயலாளர் மைக்கேல் அம்மாள் ஞானப்பிரகாசம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என். செல்வராஜ், நகர அவைத் தலைவர்
கு. வீராச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ. மூர்த்தி, தெற்கு ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன், பேரூர் கழகச் செயலாளர் என். எஸ். சேகர், பேரூராட்சி துணைத்தலைவர் கி. ரெ. பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, நகரக் கழக நிர்வாகிகள், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள், பிரதிநிதிகள், வாக்குச் சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்புக்கு ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Post a Comment