தஞ்சை தொகுதியை குறிவைக்கும் அதிரை முன்னாள் சேர்மன்.!

 


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.தமிழகத்தில் திமுகவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரும்,அதிராம்பட்டினம் முன்னாள் சேர்மனுமான அஸ்லம் விருப்ப மனுவை சென்னை திமுக அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

ஏற்கனவே தற்போதைய எம்பி பழனிமாணிக்கம்,பழஞ்சுர் செல்வம்,அஞ்சுகம் பூபதி ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டு வரும் வேளையில் சிறுபான்மையை சேர்ந்த இவருக்கு தொகுதியை ஒதுக்குமா என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Post a Comment

Previous Post Next Post