பட்டுக்கோட்டை அருகே பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றல்,உணவுத்துறை அதிகாரிகள் திடீர் விசிட்.!

 



பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் கடைத்தெரு பகுதியில் தரமற்ற உணவு பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் சித்ரா அறிவுறுத்தலின்படி பட்டுக்கோட்டை நகர் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேல்முருகன் தலைமையில் உதயசூரியபுரம் பகுதியில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.

இதில் 10 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதே போல் உணவு பொருட்களின் நிறுவனத்தின் பெயர் மற்றும் காலாவதி தேதி ஆகியவை பதிவு செய்யப்படாதது கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர் 30 கிலோ உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை
செய்த கடை உரிமையாளருக்கு ரூ. 3 ஆயிரமும், தரமற்ற உணவு பொருட்களை விற்ற கடை உரிமையாளருக்கு தலா 2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

மற்ற கடைகளுக்கு எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட் டது. இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post