செவ்வாய்க்கிழமை மாலை இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் சமூக ஊடக தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிழந்தன. இந்த இரண்டு தளங்களிலும் உள்ள உள்நுழைவு சிக்கல்கள் குறித்து பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.
இரண்டு செயலிகளிலிருந்தும் பயனாளிகள் லாக் அவுட் செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் உள்நுழைவதில் பிரச்சனைகள் இருக்கின்றன. இணைய சேவை செயலிழப்பைக் கண்காணிக்கும் வலைத்தளமான டவுன் டிடெக்டர் தளத்தில் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

Post a Comment