தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் கடற்கரை தெரு இளைஞர்களால் மேற்கொண்டு வரும் பணிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்.
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கைஃபா மற்றும் லயன்ஸ் சங்கம் இணைந்து வாழைக்குளம்,குளங்களை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றுதல், கடற்கரை பகுதியை மீட்டு அங்கே பாதைகளில் மண்டி கிடந்த முட்புதர்களை அகற்றி பாதைகளை அமைத்து வரும் உன்னத பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையறிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மேற்கொண்டு வரும் பணிகளை பார்வையிட்டு மரங்களை குளங்களை சுற்றி நட்டு வைத்தார்.மேலும் அவர் பேசுகையில் இந்த பணிகளை மேற்கொண்டுபவர்களை பாராட்டி பேசினார்.காலநிலை மாற்றம் குறித்தும் சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு என்னென்ன முயற்சிகள் முடியுமோ அதனை செய்து தருவதாக உறுதியளித்தார்.இதில் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜமாஅத்தார்கள்,வார்டு கவுன்சிலர்கள்,சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.













Post a Comment