கடந்த 2023 டிசம்பர் 13-ம் தேதி அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் அவர்கள் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைமை அலுவலகத்திற்கு வந்து ஆதரவு கேட்டதை தொடர்ந்து, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு, இன்று ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் #செ_ஹைதர்_அலி அவர்களின் தலைமையில், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பாளை_ரஃபீக், பொருளாளர் திருப்பூர் ஹாலிதீன் மற்றும் துணைத் தலைவர் #முஷாஹுதீன் ஆகியோருடன், அஇஅதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு நடைபெற்றது.
இதில் இஸ்லாமிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் இஸ்லாமிய வேட்பாளரை அஇஅதிமுக தேர்ந்தெடுக்க வேண்டாம் எனவும், அஇஅதிமுக கூட்டணியில் போட்டியிட தயாராக உள்ள இஸ்லாமிய கட்சிகளுக்கு தேர்தலில் சீட்டு தர வேண்டும் எனவும், அதேபோல அஇஅதிமுக கட்சியில் இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அஇஅதிமுக-விற்கு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆதரவளிப்பதாக மொழியப்பட்டது.
அனைத்தையும் கேட்டு அறிந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுக கூட்டணியில் போட்டியிடும் இஸ்லாமிய கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக இஸ்லாமிய வேட்பாளரை தேர்ந்தெடுக்க மாட்டோம் எனவும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியை ஆதரிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியையும் கொடுத்தார்.

Post a Comment